Categories
மாநில செய்திகள்

கோடை விடுமுறை…!! சொந்த ஊர்களுக்கு செல்ல சிறப்பு ரயில்கள்….!! தென்னக ரயில்வே அறிவிப்பு…!!

தமிழகத்தில் கோடை விடுமுறையை முன்னிட்டு சிறப்பு ரயில்களை இயக்க உள்ளதாக தென்னக ரயில்வே அறிவித்துள்ளது. அதன்படி ஏப்ரல் 22ஆம் தேதி தொடங்கி ஜூன் 24ஆம் தேதி வரை இந்த சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் என அறிவித்துள்ளது. சென்னை தாம்பரம்-நாகர்கோவில் வாராந்திர சிறப்பு ரெயில் வரும் வெள்ளிக்கிழமை தோறும் இரவு 7.30 மணிக்கு தாம்பரத்தில் இருந்து புறப்பட்டு மறுநாள் காலை 7 மணிக்கு நாகர்கோவில் சென்றடைகிறது.

பின்னர் நாகர்கோவிலில் இருந்து 24ம் தேதி முதல் ஜூன் 26ம் தேதி வரை ஞாயிற்றுக்கிழமைகளில் மாலை 4.15 மணிக்கு புறப்பட்டு மறுநாள் அதிகாலை 4.10 மணிக்கு தாம்பரம் சென்றடைகிறது. இதே போல் தென்காசி வழியாக நெல்லை-தாம்பரம் செல்லும் வாராந்திர சிறப்பு இரயில் செங்கல்பட்டு, விழுப்புரம், விருத்தாச்சலம், திருச்சி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர், சிவகாசி, ஸ்ரீவில்லிபுத்தூர், ராஜபாளையம், தென்காசி, பாவூர்சத்திரம், கீழக்கடையம், அம்பை, சேரன்மகாதேவி உள்ளிட்ட பகுதிகளில் உள்ள ரயில் நிலையங்களில் நின்று செல்லும் என்றும் தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.

Categories

Tech |