Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

கோடை சீசன் களைகட்டியது…. நீலகிரியில் குவியும் சுற்றுல்லா பயணிகள்…. நியமிக்கப்பட்ட கூடுதல் காவலர்கள்….!!

பாதுகாப்பு பணிக்காக கூடுதல் காவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

நீலகிரி மாவட்டத்தில் கோடை சீசன் தொடங்கியுள்ளதால் வெளி மாநிலங்களிலிருந்தும், வெளி மாவட்டங்களில் இருந்தும் சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகரித்துள்ளது. இங்கிருக்கும் ஊட்டியில் குளிர்ச்சியான காலநிலை நிலவுகிறது. இந்நிலையில் சுற்றுலா பயணிகளின் வரத்து அதிகரித்துள்ளதால் முக்கிய சாலைகளில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இதனால் உள்ளூர் மக்களும் அவதி அடைகின்றனர். இந்தப் போக்குவரத்து ஒழுங்கு கட்டுப்படுத்துவதற்காக பிற மாவட்டங்களில் இருந்து கூடுதல் காவலர்கள் வரவழைக்கப்பட்டுள்ளனர்.

அதாவது கோவை மாவட்டத்தில் இருந்து 35 சிறப்பு காவலர்களும், திருப்பூர், ஈரோடு, நாமக்கல் ஆகிய 3 மாவட்டங்களில் இருந்து ஒரு சிறப்பு இன்ஸ்பெக்டரும் நியமிக்கப்பட்டுள்ளனர். இதனையடுத்து 100 போக்குவரத்து காவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இவர்கள் போக்குவரத்தை ஒழுங்குபடுத்தும் பணியில் ஈடுபட்டுள்ளனர். மேலும் சாலையோரங்களில் வாகனம்  நிறுத்துதல், போக்குவரத்து நெரிசல் போன்றவற்றை கண்காணித்து நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

Categories

Tech |