Categories
லைப் ஸ்டைல்

கோடைக்கால டயட்… எப்படி பின்பற்றுவது?… வாங்க பார்க்கலாம்…!!!

கோடை காலங்களில் டயட் பின்பற்றுபவர்கள் இந்த உணவுகளை அதிகம் எடுத்துக்கொள்வது மிகவும் நல்லது.

உலகில் உள்ள பெரும்பாலான மக்களுக்கு மிகப் பெரிய பிரச்சனையாக இருப்பது உடல் எடை. அதனை குறைப்பதற்கு உடற்பயிற்சி மற்றும் நடைபயிற்சி போன்ற பலவற்றை அவர்கள் செய்து வருகிறார்கள். அதிலும் குறிப்பாக டயட் பின்பற்றி வருகிறார்கள். அவ்வாறு டயட் பின்பற்றுபவர்கள் அனைவரும் காலநிலைக்கு ஏற்றவாறு தங்கள் உணவு பழக்கங்களை மாற்றிக் கொள்ள வேண்டும். அதிலும் குறிப்பாக கோடை காலங்களில் எடுத்துக்கொள்ளும் உணவுகள் மிகவும் அவசியம்.

அதன்படி கோடை காலத்தில் மூன்று வேளையும் திட உணவுகள் எடுத்துக் கொள்ள கூடாது. கஞ்சி, கூல், மோர், இளநீர் என திரவ உணவுகளை அதிகம் எடுத்துக் கொள்ளலாம். உங்கள் லன்ச் பாக்ஸ்களில் வழக்கமான உணவுகளுக்கு பதிலாக நீர் சத்துள்ள காய், பழங்களின் சாலட்டுகள், மோர் ஆகியவையே இருக்கலாம். கோடையில் குழந்தைகள் விரைவாக சோர்ந்து விடுவார்கள். அவர்களுக்கு நீராதாரங்கள் அடிக்கடி தருவது அவசியம். அதிக காரம், மசாலா மற்றும் பொரித்த உணவுகளைத் தவிர்ப்பது மிகவும் நல்லது.

Categories

Tech |