இங்கிலாந்தில் பணக்காரராக இருந்து போரடித்த இளைஞர் ஒருவர் தற்போது மீண்டும் வேலை செய்ய தொடங்கிய சம்பவம் இணையத்தில் வைரலாகி வருகிறது.
இங்கிலாந்தில் வசித்து வரும் இளைஞன் ஒருவர் தனியாரில் எழுத்தாளராக பணிபுரிந்து வந்துள்ளார். இதனையடுத்து இவர் முதன்முதலாக கடந்த 2014ஆம் ஆண்டு தான் சம்பாதித்த பணத்தை எல்லாம் கிரிப்டோகரன்சியில் முதலீடு செய்து கோடி கோடியாக அள்ளியுள்ளார்.
அதன் பின்பு ஒரு கட்டத்தில் அவருடைய 35 ஆவது வயதில் தன் வாழ்க்கைக்கு தேவையான பணத்தை சம்பாதித்து விட்டதால் ஓய்வு பெற்றுள்ளார். இந்நிலையில் அந்த 35 வயதுடைய இளைஞருக்கு பணக்காரராக இருந்து போரடித்து விட்டதால் தற்போது மீண்டும் வேலை செய்யத் தொடங்கியுள்ளார். இந்த செய்தி இணையத்தில் மிக வேகமாக பரவி வருகிறது.