விஜய் ஆண்டனி நடிப்பில் உருவாகியுள்ள கோடியில் ஒருவன் படத்தின் ஸ்னீக் பீக் வீடியோ வெளியாகியுள்ளது.
தமிழ் திரையுலகில் இசையமைப்பாளராக அறிமுகமான விஜய் ஆண்டனி தற்போது படங்களில் ஹீரோவாக நடித்து அசத்தி வருகிறார். இவர் நடிப்பில் உருவாகியுள்ள கோடியில் ஒருவன், காக்கி, அக்னி சிறகுகள் ஆகிய படங்கள் ரிலீஸுக்கு தயாராகி வருகிறது. இதில் கோடியில் ஒருவன் திரைப்படம் வருகிற செப்டம்பர் 17-ஆம் தேதி ரிலீஸாகவுள்ளது. ஆனந்தகிருஷ்ணன் எழுதி இயக்கியுள்ள இந்த படத்தில் ஆத்மிகா கதாநாயகியாக நடித்துள்ளார் .
https://twitter.com/vijayantony/status/1437378287106281473
செந்தூர் பிலிம் இன்டர்நேஷனல் நிறுவனம் தயாரித்துள்ள இந்த படத்திற்கு நிவாஸ் கே.பிரசன்னா இசையமைத்துள்ளார். மேலும் இந்த படத்திற்கு நடிகர் விஜய் ஆண்டனியே படத்தொகுப்பு செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் கோடியில் ஒருவன் படத்தின் அசத்தலான ஸ்னீக் பீக் வீடியோ வெளியாகி ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வருகிறது.