Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

கோடநாடு கொலை மற்றும் கொள்ளை…. 2 பேர் நீதிமன்றத்தில் ஆஜர்…. வழக்கு ஒத்திவைப்பு…!!

கோடநாடு கொலை, கொள்ளை வழக்கில் 2 பேர் நீதிமன்றத்தில் ஆஜராகினர்.

நீலகிரி மாவட்டத்திலுள்ள கோடநாடு பகுதியில் நெஞ்சை பதற வைக்கும் கொலை மற்றும் கொள்ளை சம்பவம் நடைபெற்றது. இந்த வழக்கில் உதயகுமார், ஜித்தன் ஜாய், மனோஜ் சாமி, சந்தோஷ் சாமி, பிஜின், சம்சீர் அலி, சதீசன், திபு, மனோஜ், சயான் உள்ளிட்ட 10 பேரை காவல்துறையினர் கைது செய்தனர். இது தொடர்பான வழக்கு நீலகிரி மாவட்ட நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. ‌ இந்த வழக்கில் தொடர்புடைய சயான் மற்றும் மனோஜ் ஆகிய 2 பேரும் நீதிமன்றத்தில் ஆஜராகினர். இந்த வழக்கில் தொடர்புடைய மற்ற 8 பேரும் ஆஜராகவில்லை. இந்த வழக்கில் சென்னை உயர் நீதிமன்றத்தில் திபு தாக்கல் செய்த மனு குறித்து நீதிபதி கேட்டறிந்தார்.

இதனையடுத்து இந்த வழக்கு வருகிற 8-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து சிறப்பு வக்கீல் ஷாஜகான் பத்திரிகையாளர்களிடம் பேட்டி அளித்துள்ளார். அதில் கோடநாடு கொலை, கொள்ளை வழக்கில் இதுவரை 202 சாட்சிகளிடம்  விசாரணை செய்யப்பட்டுள்ளது. இதைத்தொடர்ந்து தொலைத்தொடர்பு மற்றும் மின்னணு ஆதாரங்கள் சேகரிக்கப்பட்டு வருகிறது. மேலும் எதிர்த்தரப்பு சாட்சிகளை விசாரிக்கும்போது கூட்டு சதியில் ஈடுபட்டது தெரியவந்தால், அவர்களும் இதில் சேர்க்கப்படுவார்கள். இதனால் வழக்கு பாதிக்கப்படும். இதன் காரணமாக நீதிபதி அந்த சாட்சிகளை விசாரிக்க அனுமதியில்லை என கூறி வழக்கை  4 வாரங்களுக்கு தள்ளி வைத்துள்ளார்.

Categories

Tech |