நாடு முழுவதும் கடந்த ஜூலை மாதம் 17-ஆம் தேதி நீட் தேர்வு நடைபெற்றது. இந்தத் தேர்வு 490 நகரங்களில் 3500 மையங்களில் நடைபெற்றது. இந்த தேர்வை 18 லட்சத்திற்கும் அதிகமான மாணவ-மாணவிகள் எழுதிய நிலையில், தமிழகத்தில் மட்டும் ஒரு லட்சத்திற்கும் அதிகமானோர் எழுதியுள்ளனர். இந்த தேர்வில் தமிழகத்தைச் சேர்ந்த 67,787 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். இந்நிலையில் சென்னை குரோம்பேட்டை பகுதியில் உள்ள அரசு பள்ளியில் சௌந்தர்ராஜன் என்ற மாணவர் படித்தார்.
இவர் 503 மதிப்பெண்கள் பெற்று நீட் தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ளார். இந்த மாணவர் கொரோனா ஊரடங்கின் காலத்தில் வீட்டில் இருந்தபடியே நீட் தேர்வுக்கு தயாராகி 503 மதிப்பெண்கள் பெற்று தேர்ச்சி பெற்றுள்ளார். இந்த மாணவனைபள்ளி நிர்வாகம் பாராட்டியது. மேலும் கொரோனா காலத்தில் நீட் தேர்வு கோச்சிங் எதுவும் செல்லாமல் வீட்டில் இருந்தபடியே படித்து தேர்ச்சி பெற்றது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது என மாணவர் சௌந்தரராஜன் கூறியுள்ளார்