காட்டு தீயை அணைக்கும் பணியில் வனத்துறையினர் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.
விருதுநகர் மாவட்டத்திலுள்ள நீராவி பிட் வனப்பகுதியில் நேற்று முன்தினம் இரவு நேரத்தில் திடீரென தீ விபத்து ஏற்பட்டுள்ளது. மேலும் பலத்த காற்று வீசியதால் காட்டு தீ வேகமாக பரவியது. இந்த தீயில் ஏராளமான மரங்கள் மற்றும் மூலிகைச் செடிகள் எரிந்து நாசமானது.
இதுகுறித்து அறிந்த தீ தடுப்பு மற்றும் வனக்காவலர்கள் அடங்கிய குழுவினர் தீயை அணைக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். இந்த காட்டுத்தீயால் யானை, காட்டெருமை, புலி, கரடி உள்ளிட்ட வனவிலங்குகள் பாதிக்கப்படும் நிலை ஏற்பட்டுள்ளதாக சமூக ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர்.