Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

கொழுந்து விட்டு எரிந்த தோட்டம்…. தீயணைப்பு வீரர்களின் போராட்டம்…. ஈரோட்டில் பரபரப்பு…!!

கரும்பு தோட்டத்தில் பற்றி எரிந்த தீயை தீயணைப்பு வீரர்கள் 1 மணி நேர போராட்டத்திற்கு பிறகு அணைத்தனர்.

ஈரோடு மாவட்டத்தில் உள்ள கருக்குபாளையம் பகுதியில் விவசாயியான ஆறுமுகம் என்பவர் வசித்து வருகிறார். இவர் தனக்கு சொந்தமான 2 1/2 ஏக்கர் தோட்டத்தில் கரும்பு பயிரிட்டுள்ளார். இந்நிலையில் தொழிலாளர்கள் தோட்டத்தில் இருந்த கரும்புகளை வெட்டி டிராக்டரில் ஏற்றி கொண்டு சென்றனர். சிறுது நேரத்தில் தோட்டத்தில் காய்ந்துபோன கரும்பு தோகைகள் இருந்த பகுதியில் திடீரென தீப்பிடித்து எரிய ஆரம்பித்துள்ளது. மேலும் காற்றின் வேகத்தால் தீ மளமளவென அனைத்து இடங்களுக்கும் பரவியது.

இதுகுறித்து தகவல் அறிந்த தீயணைப்பு நிலைய வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று 1 மணி நேர போராட்டத்திற்கு பிறகு தோட்டத்தில் பற்றி எரிந்த தீயை அணைத்துவிட்டனர். ஆனால் இந்த தீ விபத்தில் 1 லட்ச ரூபாய் மதிப்புள்ள சொட்டுநீர் பாசனக் கருவிகள் எரிந்து நாசமாகிவிட்டது. மேலும் தென்னை மர கிளைகளும் கருகியது. இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீ விபத்து ஏற்பட்டதற்கான காரணம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |