காட்டுப்பகுதியில் பற்றி எரிந்த தீயை தீயணைப்பு வீரர்கள் நீண்ட நேர போராட்டத்திற்கு பிறகு அணைத்தனர்.
நீலகிரி மாவட்டத்திலுள்ள குன்னூர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் தற்போது வெயிலின் தாக்கம் அதிகமாக உள்ளதால் வன பகுதியில் இருக்கும் செடி, கொடிகள் வறண்டு காணப்படுகிறது. இந்நிலையில் கல்குழி பாரதி நகர் குடியிருப்பு அருகே இருக்கும் வனப்பகுதியில் திடீரென தீப்பிடித்து எரிய ஆரம்பித்துள்ளது. மேலும் காற்றின் வேகத்தால் தீ வேகமாக பரவியது.
இதுகுறித்து தகவல் அறிந்த தீயணைப்பு நிலைய வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று வனப்பகுதியில் பற்றி எரிந்த தீயை அணைத்துவிட்டனர். இந்த தீ விபத்து ஏற்பட்டதால் காட்டு பகுதியில் இருக்கும் முள்ளம்பன்றி, பாம்புகள் வெளியேறி குடியிருப்பு பகுதிகளுக்குள் நுழைந்ததால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.