கூரை வீட்டில் திடீரென தீ விபத்து ஏற்பட்டதால் 4 லட்சம் ரூபாய் மதிப்புள்ள பொருட்கள் எரிந்து நாசமானது.
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள புதுப்பாலாப்பட்டு கிராமத்தில் அப்பாதுரை- சித்ரா தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்களது கூரைவீடு நேற்று காலை திடீரென தீப்பிடித்து எரிய ஆரம்பித்தது. இதுகுறித்து தகவல் அறிந்த தீயணைப்புதுறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று கூரை வீட்டில் பற்றி எரிந்த தீயை அணைத்தனர். ஆனால் வீட்டிலிருந்த 4 லட்ச ரூபாய் மதிப்புள்ள பொருட்கள் எரிந்து நாசமானது.
இதனை அடுத்து மண்டல துணை தாசில்தார் பசுபதி, தாசில்தார் இந்திரா, வருவாய் ஆய்வாளர் திருமலை ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சித்ரா குடும்பத்தினரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறி நிவாரண உதவி வணங்கியுள்ளனர். இது குறித்து வழக்குபதிவு செய்த காவல்துறையினர் தீ விபத்து ஏற்பட்டதற்கான காரணம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.