Categories
உலக செய்திகள் வைரல்

உயிர்களை காவு வாங்கும் கொடிய நோய்…. 520 பேர் பாதிப்பு…. அச்சத்தில் ஆழ்ந்த மக்கள்….!!

பிளேக் நோயின் எழுச்சி தற்போது காங்கோவில் அதிகரித்து வருவதால் மக்கள் அச்சத்தில் இருக்கின்றனர்

 

14ம் நூற்றாண்டின் நடுப்பகுதியில் ஐரோப்பாவில் பரவியது பிளேக் நோய்.அதேசமயம் வட ஆப்பிரிக்காவையும் ஆசியாவையும் இந்த நோய் பெரிதும் தாக்கியது. தற்போது ஆப்பிரிக்கா நாடான காங்கோவில் வேகமாக பரவி வருகிறது வடகிழக்கு காங்கோவில் உள்ள ஈட்டுரி மாகாணத்தின் பிரிங்கியில் நவம்பர் 15 முதல் டிசம்பர் 13 வரை இந்தக் கொள்ளை நோய் அதிகமாக அடையாளம் காணப்பட்டதாக தெரியவந்துள்ளது.

 

இந்த நோய் 3 மாத குழந்தை மற்றும் இளைஞர்களையே அதிக அளவில் தாக்குவதாக கூறப்படுகிறது. எலிகள் கொத்து கொத்தாக மரணம் அடைந்ததற்கு பின்னரே இந்த கொடூரக் கொள்ளை நோயின் எழுச்சி தொடங்கியது. இதுவரை 520 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் அதில் 31 பேர் மரணமடைந்துள்ளனர்.மனித வரலாற்றில் அதிக உயிரிழப்பை ஏற்படுத்திய பெருந் தொற்று என்று இந்த நோயை கூறுகிறார்கள்.இந்த மரணத்தை கருப்பு மரணம் என்று அழைக்கின்றனர்

Categories

Tech |