வீட்டு பூட்டை உடைத்து நகை மற்றும் பணத்தை கொள்ளையடித்து சென்ற ஒருவரை காவல்துறையினர் கைது செய்தனர்.
காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள வண்டிக்காரத் தெருவில் ஓய்வு பெற்ற ஆசிரியர் தியாகராஜன் என்பவர் வசித்து வருகிறார். இந்நிலையில் கடந்த ஜூலை மாதம் இவரது வீட்டின் பூட்டை உடைத்து பீரோவில் இருந்த 1 3/4 பவுன் தங்க நகை மற்றும் 25,00,000 ரூபாய் ரொக்கப் பணத்தை திருடி சென்றுள்ளனர். இது பற்றி வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் கொள்ளையடித்து சென்றவர்களை தேடும் பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது அம்பத்தூர் பகுதியில் காவல்துறையினர் வாகன சோதனையில் ஈடுபட்டு கொண்டிருந்தனர்.
இதனை அடுத்து அந்த வழியாக இருசக்கர வாகனத்தில் வந்து கொண்டிருந்த வாலிபரை மடக்கி பிடித்து விசாரணை செய்த போது அவர் முன்னுக்குப் பின் முரணாக பதில் அளித்துள்ளார். அதன்பின் அவரை விசாரித்த போது அவர் தினேஷ் என்பது தெரியவந்துள்ளது. அந்த விசாரணையில் தியாகராஜன் வீட்டில் திருடியதை ஒப்புக் கொண்டுள்ளார். மேலும் இது குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் அவரை கைது செய்து அவரிடம் இருந்த 1 பவுன் தங்க நகையை பறிமுதல் செய்துள்ளனர்.