Categories
மாநில செய்திகள்

“கொள்ளையடித்த வீட்டில் ஐ லவ் யூ வாசகம்”…. விருப்பத்தை தெரிவித்த கொள்ளையர்கள்…!!!!!!

கோவா மாநிலத்தில் ஒரு வீட்டில் கொள்ளையடித்த திருடர்கள் அங்கு ஐ லவ் யூ என எழுதி தங்கள் விருப்பத்தை தெரிவித்த புதுமையான சம்பவம் நடைபெற்றுள்ளது.

கோவா மாநிலம் மார்கோவாவில் கொள்ளையடித்த வீட்டில் கொள்ளையர்கள் காதல் விருப்பத்தை தெரிவித்துள்ள புதுமையான சம்பவம் நடைபெற்றுள்ளது. அதாவது அந்த ஊரில் வசித்து வரும் ஆசிப் ஜெக் என்பவர் தனது வீட்டை பூட்டிவிட்டு வெளியே சென்றிருக்கின்றார். அப்போது இரண்டு நாள் கழித்து அவர் வீடு திரும்பிய போது வீட்டிலுள்ள பூட்டு உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளார். உடனடியாக உள்ளே சென்று பார்த்தபோது கொள்ளை நடந்திருப்பதை அறிந்து கொண்டார்.

அதில் 20 லட்சம் ரூபாய் மதிப்புள்ள தங்கம், வெள்ளி நகைகளும், ரூபாய் ஒரு லட்சத்து 50 ஆயிரமும் திருடு போய் இருக்கின்றது. அதுமட்டுமல்லாமல் டிவி திரையில் ஐ லவ் யூ என கொள்ளையர்கள் மார்க்கர் பேனாவால் எழுதி வைத்திருக்கின்றனர். இதுதொடர்பான புகாரின்பேரில் போலீசார் கொள்ளை  வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Categories

Tech |