வீடுகளை தண்ணீர் சூழ்ந்ததால் பொதுமக்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.
கடலூர் மாவட்டத்தில் உள்ள காட்டுமன்னார்கோவில் அருகே கீழணை அமைந்துள்ளது. இந்த அணை கொள்ளிடம் ஆற்றின் குறுக்கே அமைந்துள்ளது. இந்த அணையின் நீர்மட்டம் 9 அடி ஆகும். இந்த அணையின் மூலம் தஞ்சை, மயிலாடுதுறை மற்றும் கடலூர் போன்ற மாவட்டங்களில் உள்ள விவசாய நிலங்கள் நீர் பாசன வசதி பெறுகிறது. இந்நிலையில் மேட்டூர் அணையில் இருந்து காவிரிக்கு அதிக அளவில் தண்ணீர் திறக்கப்படுவதால் கொள்ளிடம் ஆற்றுக்கு தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளது. இங்கு கல்லணையிலிருந்து வினாடிக்கு ஒரு லட்சத்து 85 ஆயிரம் கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. இதன் காரணமாக 1,90,000 கன அடி தண்ணீர் வெளியேற்றப் படுகிறது. இதனால் அக்கறை ஜெயங்கொண்டபட்டினம், ஜெயங்கொண்ட பட்டினம், கீழக்குண்டலப் பாடி, திட்டுக்காட்டூர் உள்ளிட்ட கிராமங்களை வெள்ளம் சூழ்ந்துள்ளது. இதனால் அப்பகுதி மக்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.
இந்நிலையில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கிராம மக்களை மீட்டு பாதுகாப்பான இடங்களில் தங்க வைத்து அவர்களுக்கு வேண்டிய உணவுகள் வழங்குவதற்கும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. இந்த பகுதிகளை நேற்று அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர்செல்வம் பார்வையிட்டார். அதன் பிறகு செய்தியாளர்களை சந்தித்து பேசிய அமைச்சர், வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கிராமத்தைச் சேர்ந்த பொதுமக்கள் யாரும் அச்சப்பட வேண்டாம் என்றார். அதன் பிறகு வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்கள் மீட்கப்பட்டு பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டு அவர்களுக்கு வேண்டிய உணவு வழங்குவதற்கும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. மேலும் மீட்டு குழுவினர், வருவாய்த் துறை அதிகாரிகள் மற்றும் பொதுப் பணித்துறையினர் தொடர்ந்து வெள்ளம் பாதிக்கப் பட்ட பணிகளை கண்காணித்து வருவதோடு, பொதுமக்களுக்கு வேண்டிய உதவிகளையும் செய்து வருகிறார்கள் என்றார்.