Categories
இயற்கை மருத்துவம் லைப் ஸ்டைல்

கொளுத்தும் வெயிலில்… உடலுக்கு குளிர்ச்சி தரும் எலுமிச்சை…. கட்டாயம் சாப்பிடுங்க..!!

கோடை கொளுத்தும் வெயிலால் முதியவர்கள் மட்டுமின்றி குழந்தைகள் உட்பட அனைவரும் பாதிக்கப்பட்டுள்ளோம். இதற்கு எளிய மருத்துவ முறைகள் குறித்து தெரிந்து கொள்வோம்.

எலுமிச்சை – இதை தேவக்கனி, இராஜக்கனி என்றும் கூறுவார்கள். எல்லா பழங்களையும் எலி கடித்து
விடும் ஆனால் எலுமிச்சையை மட்டும் எலி தொடவே தொடாது.

எலி மிச்சம் வைத்ததாதல் தானோ என்னவோ இந்தப் பழத்திற்கு எலிமிச்சை என்று பெயர் வந்திருக்கலாம் என சித்தர்கள் மூலம் அறியப்படுகிறது.

எலுமிச்சை புளிப்பு சுவை மிக்க மஞ்சள் நிறப் பழத்தைக் கொடுக்கும் ஒரு வகைத் தாவரம்.

எலுமிச்சம் பழச் சாற்றில் 5% அளவுக்கு சிட்ரிக் அமிலம் உண்டு. இதனால் இது புளிப்புச் சுவை.

இதன் pH அளவு 2 முதல் 3 வரை இருக்கும். இதனால் இதைப் பள்ளிகளில் கற்பித்தல் சோதனைகளில் மலிவான அமிலமாகப் பயன்படுத்துகிறார்கள்.

இதன் தனித்துவமான சுவை காரணமாக இதனை அடிப்படியாகக் கொண்டு பல வகையான பானங்களும், இனிப்பு வகைகளும் தயாரிக்கப் பட்டு ஆக்கப்பட்டு
வருகின்றன.

எலுமிச்சைச் சாறுடன் நீர் கலந்து அடிக்கடி வாய் கொப்பளித்தால் வாய் துர் நாற்றம் மறையும்.

உடலில் அதிக அளவில் ஏற்படும் நீர் இழப்பு சோர்வை மட்டுமின்றி சன் ஸ்ட்ரோக்கையும் ஏற்படுத்தும். எனவே அதிக அளவு நீர் பருகுதல் உடலுக்கு குளிர்ச்சியூட்டும் காய், கனி வகைகளை அதிகஅளவில் எடுத்துக் கொள்வது இத்தகைய பாதிப்புகளில் இருந்து நம்மை பாதுகாக்கும்.

இது ஒரு சிட்ரஸ் ப்ரூட் வகையை சார்ந்தது. அதன் சாறு மட்டுமின்றி தோலும் சிறந்த மருந்தாகிறது. கொளுத்தும் கோடை வெயிலின் தாக்கத்தினால் ஏற்படும் உடல் வெப்ப பிரச்சனையில் இருந்து விடுபட எலுமிச்சை வெள்ளரி கலந்த சாறு பயன்தரும்.

எலுமிச்சை தோலை பொடியாக நறுக்கி வெயிலில் காயவைத்து பொடித்து வைத்து கொண்டால் தோல் நோய்கள் மற்றும் கட்டிகளுக்கு தீர்வு தரும் மருந்தாக இருக்கும்.

வாந்தியா? எலுமிச்சைச் சாறுடன், இஞ்சிச் சாறு,
சிறிதளவு தேன் சேர்த்து, வெதுவெதுப்பான நீரில் கலந்து
சாப்பிட விரைவில் குணம் தெரியும்.

எலுமிச்சைச் சாறுடன் வெந்நீர் கலந்து குடிக்கும் போது
நெஞ்செரிச்சல், ஏப்பம், வயிறு உப்புசம் குறையும். ஜீரணசக்கியும் அதிகரிக்கும்.

Categories

Tech |