Categories
சினிமா

“கொலை” திரைப்படம்…. எதுக்காக கொலை பண்ணாங்க?…. வெளியான டிரைலர்….!!!!

இசையமைப்பாளர் மற்றும் நடிகருமான விஜய்ஆண்டனி இப்போது கிரைம் திரில்லர் வகை படம் ஒன்றில் நடித்துள்ளார். இப்படத்திற்கு “கொலை” என்று பெயரிடப்பட்டு இருக்கிறது. இந்த திரைப்படத்தை விடியும் முன் புகழ் இயக்குனர் பாலாஜி குமார் இயக்கி இருக்கிறார். இத்திரைப்படத்தை இன்பினிட்டி மற்றும் லோட்டஸ் புரொடக்ஷன்ஸ் தயாரித்து உள்ளது. இதில் விஜய்ஆண்டனிக்கு ஜோடியாக நடிகை ரித்திகா சிங் நடித்து உள்ளார். அத்துடன் மீனாட்சி சவுத்ரி, ராதிகா சரத்குமார், முரளி சர்மா, அர்ஜுன் சிதம்பரம் உட்பட பலர் இப்படத்தில் நடித்துள்ளனர்.

இப்படத்திற்கு சிவகுமார் விஜயன் ஒளிப்பதிவு செய்திருக்கிறார். கிரீஷ் கோபால கிருஷ்ணன் இசையமைத்துள்ளார். அண்மையில் வெளியாகிய இப்படத்தின் பர்ஸ்ட்லுக் போஸ்டர் மற்றும் முதல் பாடல் ரசிகர்களை கவர்ந்தது. இந்நிலையில் இந்த படத்தின் டிரைலர் வெளியாகி இருக்கிறது. மர்மமான முறையில் கொலை செய்த கொலையாளிகளை கண்டுபிடிக்க விஜய் ஆண்டனி எடுக்கும் முயற்சிகளை மையமாக வைத்து உருவாகி இருக்கும் இந்த டிரைலர் வெளியாகி சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.

Categories

Tech |