Categories
தேசிய செய்திகள்

கொலை செய்வது எப்படி….? கூகுளில் இப்படி எல்லாமா தேடுவீங்க…. அதுக்கு இப்படியா….?

பெற்றோருக்கு விஷம் கொடுத்த மகளை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

கேரள மாநிலம் திருச்சூர் பகுதியில் சந்திரன்-ருக்மணி தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு இந்துலேகா என்ற மகள் இருக்கிறார்.இவருக்கு கடந்த 2 வருடங்களுக்கு முன்பு திருமணம் ஆன நிலையில், கணவர் சவுதி அரேபியாவில் வேலை பார்த்து வருகிறார். இந்துலேகா ஆடம்பர வாழ்க்கையை விரும்பியதால் தன்னுடைய கணவருக்கு தெரியாமல் 50 சவரன் நகைகளை வங்கியில் அடகு வைத்து தோழிகளுடன் சினிமா, ஹோட்டல் என ஜாலியாக இருந்து வந்துள்ளார். இந்நிலையில் இந்துலேகாவின் கணவர் சவுதியில் இருந்து திரும்பி வந்து வீட்டில் இருந்து நகைகளை எங்கே என்று கேட்டுள்ளார்.

அதற்கு இந்துலேகா நடந்ததை கணவரிடம் கூறவே, இன்னும் 10 நாட்களுக்குள் நகை வீட்டிற்கு வராவிட்டால் நடப்பதே வேறு என்று கூறியுள்ளார். இதனால் என்ன செய்வது என்று திணறிய இந்துலேகா தன்னுடைய பெற்றோர் குடியிருந்த வீடு மற்றும் 14 சென்ட் இடத்தை விற்பதற்கு முயற்சி செய்துள்ளார். ஆனால் இந்து லேகாவின் பெற்றோர் வீடு மற்றும் இடத்தை விற்பனை செய்வதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இதனால் ஆத்திரமடைந்த இந்து லேகா தாய் மற்றும் தந்தையை கொலை செய்வதற்கு முடிவு செய்துள்ளார். இந்நிலையில் இந்துலேகாவுக்கு எப்படி கொலை செய்வது என்பது தெரியாத காரணத்தினால் கூகுளில் கொலை செய்வது எப்படி என்று தேடியுள்ளார்.

இதனையடுத்து இந்துலேகா தன்னுடைய தாய் மற்றும் தந்தைக்கு டீயில் எலி மருந்தை கலக்கி கொடுத்துள்ளார். இந்த டீயை குடித்த இந்துலேகாவின் தாயார் பரிதாபமாக உயிரிழந்து விட்டார். இது தொடர்பாக காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து இந்துலேகாவை கைது செய்துள்ளனர். மேலும் எலி மருந்து கலந்தால் டீயை குடித்த இந்துலேகாவின் தந்தை மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார். ஒரு பெண் கூகுளில் எப்படி கொலை செய்வது எனத் தேடி தன்னுடைய தாய் தந்தையருக்கு எலி மருந்து கலந்து கொடுத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Categories

Tech |