மகாராஷ்டிரா மாநிலத்தில் முதலில் உச்சத்தில் இருந்த கொரோனா பாதிப்பு தற்போது கட்டுக்குள் வந்துள்ளது. அதனால் மாநிலத்தில் பல்வேறு புதிய தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன.இந்நிலையில் தீபாவளிக்கு பிறகு கொரோனா 3 வது அலை உருவாகும் அபாயம் இருப்பதாக மகாராஷ்டிர மாநில சுகாதாரத்துறை அமைச்சர் ராஜேஷ் தோபே எச்சரித்துள்ளார்.
கொரோனா இரண்டாவது அலை இன்னும் முடியவில்லை. தற்போது உள்ள நிலவரப்படி மூன்றாவது அலை உருவாக சாதகமான சூழல் இல்லை. ஆனால் தீபாவளி கொண்டாட்டத்திற்கு பிறகு மூன்றாவது அலை அபாயம் இருக்கும். எனவே அதற்கான சூழலை ஆய்வு செய்து வருகிறோம் என்று அவர் கூறியுள்ளார்.