Categories
அரசியல்

கொரோனா 3வது அலை…. ஒபிஎஸ் முதல்வருக்கு வைத்த கோரிக்கை…!!!

கொரோனா 3வது அலை  பரவாமல் இருப்பதற்கு, தமிழக அரசானது கண்காணிப்பு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுமென ஓ பன்னீர்செல்வம் வலியுறுத்தி உள்ளார்.

கொரோனா 3வது அலை பரவலை குறித்து ஓ பன்னீர்செல்வம் வெளியிட்ட அறிக்கையில், “பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையானது ஏற்ற,இறக்கமாகவே உள்ளது. இந்நிலையில் வரும் 3வது அலையானது மிகவும் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது. இந்த அச்சத்தை போக்கும் வகையில் சமூக இடைவெளியை, அனுமதிக்கப்பட்ட அனைத்து கடைகளிலும் கடைபிடிக்க வேண்டும். ஒரே நேரத்தில் அதிகப்படியான நபர்களை உள்ளே அனுமதிக்க கூடாது போன்ற கட்டுப்பாடுகளை தீவிரமாக்கப்பட வேண்டும்.

மக்கள் அதிகமாகக் கூடும் இடங்களான கடைகள், வணிக வளாகங்கள் இருக்கும் சாலைகளில் அதிக நபர்கள் கூடுவதை தவிர்க்க வேண்டும். கட்டுப்பாடுகளை அனைவரும் பின்பற்றுகிறார்களா என்பதை உறுதி செய்யவும் ஒரு கூட்டம் அலைமோதுகிறதை  கண்காணிக்கவும் உட்பட  கொரோனா கட்டுப்பாடுகள் குறித்த விழிப்புணர்வை மக்களிடம் தொடர்ந்து ஏற்படுத்த வேண்டும். ஏற்ற, இறக்கமாக இருக்கும் நோய் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையை தமிழக அரசானது உரிய அறிவுரைகளை அதிகாரிகளுக்கு வழங்கி குறைப்பதற்கு உறுதுணையாக இருக்க வேண்டும்” என கூறியுள்ளார்

Categories

Tech |