சிவகங்கை மாவட்டத்தில் உள்ள காரைக்குடி வாக்கு எண்ணும் மையத்தில் பங்கேற்கும் அரசியல் முகவர்களுக்கு நேற்று முன்தினம் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.
வாக்கு எண்ணிக்கை மையத்திற்கு வரும் அனைவரும் கொரோனா இரண்டாவது அலை பரவலை கருத்தில் கொண்டு கொரோனா பரிசோதனை சான்றிதழ் வைத்திருக்க வேண்டும் என்று தேர்தல் ஆணையம் வலியுறுத்தியுள்ளது. இதையடுத்து கொரோனா பரிசோதனையை வாக்கு எண்ணிக்கை மையத்தில் பணியாற்றக்கூடிய அனைவரும் மேற்கொண்டு வருகின்றனர். மேலும் பத்திரிகையாளர்கள், அரசியல் முகவர்கள், அரசு அலுவலர்களுக்கான பரிசோதனை அரசு மருத்துவமனை மற்றும் காரைக்குடியில் உள்ள அழகப்பா அரசு பொறியியல் கல்லூரி மாணவிகள் விடுதியில் நடைபெற்றது.
அதில் அரசு மருத்துவமனையில் நடைபெற்ற கொரோனா பரிசோதனை முகாமில் அரசு அலுவலர்கள், பத்திரிக்கையாளர்களும் மாணவர்கள் விடுதியில் நடைபெற்ற பரிசோதனை முகாமில் கட்சி முகவர்களும் கலந்து கொண்டனர். மேலும் தேர்தல் வாக்கு எண்ணிக்கையில் பங்கேற்க உள்ள 234 முகவர்களும் நேற்று முன்தினம் ஒரேநாளில் கொரோனா பரிசோதனை செய்து கொண்டனர்.