Categories
சேலம் மாவட்ட செய்திகள்

துரத்தும் கொரோனா… 30 ஆயிரத்தை தாண்டிய தொற்று… பறிபோன முதியவர் உயிர்…!!

சேலம் மாவட்டத்தில் கொரோனா பரிசோதனையின் போது ஒரே நாளில் 400 பேருக்கு தொற்று இருப்பது சோதனையின் முடிவில் உறுதி செய்யப்பட்டுள்ளது.

தமிழகத்தில் கொரோனா பரவல் அதிகரித்து வரும் நிலையில் தொற்று பரவுவதை கட்டுப்படுத்த அதிகாரிகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் சேலம் மாவட்டத்தில் கொரோனா பரிசோதனையின் போது ஒரே நாளில் 400 பேருக்கு தொற்று இருப்பது சோதனையின் முடிவில் உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மாவட்டத்தில் தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் மொத்த எண்ணிக்கை 37 ஆயிரத்து 72 ஆக அதிகரித்துள்ளது.

இதனையடுத்து தொற்றால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தவர்களில் 140 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். மேலும் அரசு மருத்துவமனையில் தொற்றால் பாதிக்கப்பட்ட முதியவருக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக இறந்து விட்டார்.

Categories

Tech |