கொரோனாவின் கோரத்தாண்டவம் பச்சிளம் குழந்தையும் விட்டு வைக்கவில்லை, பிறந்து 42 நாட்கள் ஆன குழந்தை இந்த தொற்றினால் உயிரிழந்த சம்பவம் அமெரிக்காவில் மேலும் பெரும் சோகத்தை உண்டாக்கியுள்ளது.
கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் சீனாவின் ஹூபேய் மாகாணம் வுகான் நகரில் உருவெடுத்த கோரோனோ வைரஸ் இப்பொழுது உலகம் முழுவதும் 203 நாடுகளுக்கு பரவி நிலைகுலைய செய்து வருகிறது.
உலகம் முழுவதும் இதுவரை 9 லட்சத்து 35 ஆயிரத்து 581 பேருக்கு வைரஸ் பரவியுள்ளது. வைரஸ் தாக்குதலுக்கு இதுவரை 47 ஆயிரத்து 223 பேர் உயிரிழந்துள்ளனர். வைரஸ் பரவியவர்களில் 1 லட்சத்து 94 ஆயிரத்து 260 பேர் குணமடைந்து சிகிச்சைக்கு பின் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர்.
உலக அளவில் கொரோனா அதிகம் பரவியுள்ள நாடுகளின் பட்டியலில் அமெரிக்கா தான் முதலிடம் வகிக்கிறது. அந்நாட்டில் இதுவரை பாதிக்கப்பட்டவர்கள் 2 லட்சத்து 15 ஆயிரத்து 081 பேருக்கும், அதில் அவர்களில் 2 லட்சத்து 01 ஆயிரத்து 094 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
வைரஸ் பாதிக்கப்பட்டவர்களில் 8 ஆயிரத்து 878 பேர் சிகிச்சைக்கு பின் குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். மேலும், வைரஸ் தாக்குதலுக்கு இதுவரை 5 ஆயிரத்து 109 பேர் உயிரிழந்துள்ளனர்.
இந்த நிலையில், அமெரிக்காவில் கனக்டிகட் மாநிலம் ஹார்ட்போட் பகுதியை சேர்ந்த பிறந்து 42 நாட்கள் ஆன குழந்தை உடல்நிலை சரியில்லாத காரணத்தினால் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டது. இதை தொடர்ந்து அக்குழந்தைக்கு மருத்துவர்கள் சிகிக்சை மேற்கொண்டனர். அதில் கொரோனா தொற்று இருப்பதாக கண்டறிந்தனர். பரிசோதனை செய்து உறுதியும் நேற்று செய்தனர். இதனை அடுத்து குழந்தைக்கு தீவர சிகிக்சை அளித்து வந்தனர்.
இந்த நிலையில் சிகிக்சை பெற்று வந்த அக்குழந்தை சிகிச்சை பலனின்றி பரிதாபமாக பரிதாபமாக உயிரிழந்தது. இந்த தகவலை அந்த மாநிலத்தின் கவர்னர் நெட் லமொண்ட் தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டார்.
பிறந்து 42 நாட்கள் ஆன குழந்தையும் இந்த கொரோனா தொற்றிருக்கு பலியானது, உலக மக்கள் அனைவரிடமும் ஒரு பெரும் சோகத்தை நிலைநாட்டியுள்ளது..!