Categories
தேசிய செய்திகள்

கொரோனா வைரஸ்: கேரளாவில் மாநில பேரிடர் தளர்வு

கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக கேரளாவில் அறிவிக்கப்பட்டிருந்த மாநில பேரிடர் தளர்த்தப்பட்டுள்ளது.

சீனாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு தீவிரமடைந்து வரும் நிலையில், அண்டை மாநிலமான கேரளத்திலும் மூன்று பேருக்கு கொரோனா நோய் தொற்று இருப்பது கண்டறியப்பட்டது.

இதையடுத்து, கடந்த 3ஆம் தேதி கொரோனா வைரஸ் தொற்றை மாநில பேரிடராக அறிவித்தது கேரள அரசு.

இந்நிலையில், கடந்த சில நாட்களாக அம்மாநிலத்தில் யாரும் கொரோனா வைரஸால் பாதிக்கப்படாத சூழலில், முன்னர் அறிவித்த மாநில பேரிடர் தற்போது தளர்த்தப்பட்டுள்ளது.

எனினும், மூவாயிரத்துக்கும் மேற்பட்ட நோயாளிகள் இன்னும் தீவரமாகக் கண்காணிக்கப்பட்டு வருகின்றனர்.

கேரளாவில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட மூவரில் இரண்டு பேர் சீனாவின் வூகான் பல்கலைக்கழகத்தில் மருத்துவம் படித்து வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

சீனா மட்டுமின்றி பிலிப்பைன்ஸ், அமெரிக்கா, கனடா உள்ளிட்ட நாடுகளிலும் கொரோனா வைரஸ் பரவி வருகிறது. இதன் தாக்கம் காரணமாக இதுவரை 600-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.

Categories

Tech |