கொரோனா பரவி 2½ வருடங்களை கடந்தும் அந்த கொடிய வைரஸ் இன்னும் முழுமையாக ஓயவில்லை. பல்வேறு நாடுகளில் உருமாறிய கொரோனாவான ஒமிக்ரான் அதிவேகமாக பரவி வருகிறது. இந்நிலையில் இந்த வருடம் மட்டும் 10லட்சம் பேர் கொரோனா தொற்றுக்கு இறந்து உள்ளதாக உலக சுகாதார அமைப்பு அதிர்ச்சி தகவலை தெரிவித்துள்ளது. இது தொடர்பாக உலகசுகாதார அமைப்பின் தலைவர் டெட்ரோஸ் அதானம் கெப்ரேயஸ் கூறியதாவது “2 ½ வருடங்களாக கொரோனா பரவி வரும் நிலையில்,
அதன் இறப்புகளை தடுப்பதற்குத் தேவையான அனைத்து கருவிகளையும் வைத்திருக்கும் போதுகூட இந்த ஆண்டு மட்டும் 10 லட்சம் பேர் உயிரிழந்துள்ளனர். ஆனால் நாம் கொரோனாவுடன் வாழ கற்றுக் கொள்கிறோம் என கூறமுடியாது” என்று கூறுகிறார். அத்துடன் அவர் அனைத்து சுகாதாரப் பணியாளர்கள், முதியவர்கள் மற்றும் அதிக ஆபத்தில் இருப்பவர்களுக்கு தடுப்பூசி செலுத்துவதற்கான முயற்சிகளை வலுப்படுத்துமாறு அனைத்து அரசாங்கங்களையும் நாங்கள் கேட்டுக்கொள்கிறோம் எனவும் தெரிவித்தார்.