இந்தியாவில் கொரோனா உறுதியானோர் எண்ணிக்கை 70ஆயிரத்தை உயர்ந்துள்ள நிலையில், கொரோனாவிலிருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 25ஆயிரத்தை நெருங்கி வருகின்றது. 2,300க்கும் அதிகமானோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்துள்ள நிலையில்கொரோனா தடுப்பு நடவடிக்கையாக மே 17 ம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. முன்னதாக மே 3ம் தேதி ஊரடங்கு உத்தரவு இருந்த நிலையில், கொரோனா பரவல் அதிகரித்து வந்ததால் ஊரடங்கு உத்தரவானது இரண்டாம் முறையாக மே 17ம் தேதி வரை நீடிக்கப்பட்டது.
இந்த நிலையில் ஊரடங்கு உத்தரவானது முடியவடைய இன்னும் 5 நாட்களே இருக்கும் நிலையில் நேற்று அனைத்து மாநில முதலமைச்சர்களுடன் பிரதமர் மோடி ஆலோசனை நடத்தினார். காணொலி காட்சி மூலம் நடைபெற்ற இந்த ஆலோசனை 6 மணி நேரத்துக்கும் அதிகமாக நடைபெற்றது. இதில் ஊரடங்கை மேலும் நீடித்து அதிகாடியான தளர்வுகளை கொடுக்கலாம் என்றும், மாநில முதல்வர்கள் 15ஆம் தேதி ஒரு அறிக்கையை மத்திய அரசுக்கு கொடுக்க பிரதமர் மோடி வலியுறுத்தியதாக சொல்லப்படுகின்றது.
இந்த நிலையில் தான் பிரதமர் நரேந்திர மோடி இன்று இரவு 8 மணிக்கு நாட்டு மக்களிடம் பேசுவதாக காலை பிரதமர் அலுவலகம் தெரிவித்ததையடுத்து தற்போது பிரதமர் மோடி நாட்டு மக்களிடம் பேசி வருகின்றார். அதில், நாம் நம்மை தற்காத்துக் கொண்டு முன்னேறி செல்ல வேண்டும். 21ம் நூற்றாண்டு இந்தியாவுக்கான காலம்.
தற்சார்பு என்பதுதான் இந்தியாவின் கலாச்சாரம். இது விட்டுவிடும் நேரமல்ல. நாம் வெற்றி பெற வேண்டும். கொரோனா வைரஸ் இதுவரை உலகம் பார்த்திராத ஒரு போர். கொரோனா வைரஸ் ஒட்டு மொத்த உலகத்தையே சூறையாடி விட்டது.
உலகம் முழுவதும் கொரோனா வைரசுக்கு 3 லட்சம் பேர் உயிரிழந்து இருப்பது வேதனை அளிக்கிறது. இந்த ஒரு வைரஸ் ஒட்டு மொத்த உலகத்தையே சின்னாபின்னமாக்கியிருக்கிறது. ஒரே வைரஸ் நம்மை வெகுவாக பாதித்துள்ளது. இதுபோன்ற உலகளவிய பொது முடக்கம் இதற்கு முன்பு உலகம் காணாதது. கொரோனாவுக்கு எதிராக 4 மாதங்களாக ஒட்டு மொத்த உலகமே போராடி வருகிறது.
கொரோனா வைரஸில் இருந்து உயிர்களை காப்பாற்ற உலகமே முயற்சித்து வருகிறது. கோடிக்கணக்கான மக்கள் கடுமையான சூழலை சந்தித்துள்ளனர். 4 மாதங்களில் 30 லட்சம் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். கூடுதல் உறுதியுடன் கொரோனா வைரசின் தாக்குதலை சமாளிக்க தயாரக வேண்டும். வைரசுக்கு பிந்தைய உலகை இந்தியா முன்னின்று நடத்த வேண்டும்.
தற்சார்பு என்பதுதான் இந்தியாவின் கலாசாரம். உலகில் ஏற்பட்டு வரும் மாற்றங்கள் உன்னிப்பாக கண்காணிக்கப்பட்டு வருகிறது. இந்தியாவின் வளர்ச்சி உலகத்தின் வளர்ச்சிக்கு வித்திடும்