Categories
தேசிய செய்திகள்

கொரோனா வைரசால் மத்தியபிரதேசத்தில் மேலும் 19 பேருக்கு பாதிப்பு: மருத்துவ சுகாதார அதிகாரி தகவல்

கொரோனா வைரஸ் பாதிப்பால் மத்தியப்பிரதேசத்தில் மேலும் 19 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியாகியுள்ளது. இந்தியாவில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,637 ஆக உயர்ந்துள்ளது. மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிவிப்பின் படி, மகாராஷ்டிராவில் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 302 ஆக அதிகரித்துள்ளது. கேரளாவில் 241 பேருக்கும், தமிழகத்தில் 124 பேருக்கும் கொரோனா உறுதியாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. டெல்லியில் 120 பேருக்கும், தெலுங்கானாவில் 94 பேருக்கும், உத்தரபிரதேசத்தில் 103 பேருக்கும் கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. மேலும் இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதிப்பில் இருந்து இதுவரை 133 பேர் குணமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் நாட்டில் கொரோனா பாதிப்பால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 38 ஆக அதிகரித்துள்ளது. இதில் சிலர் டெல்லி நிஜாமுதீனில் நடைபெற்ற மதக்கூட்டத்தில் கலந்துகொண்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் மத்திய பிரதேசத்தில் இன்று புதிதாக 19 பேருக்கு கொரோனா தோற்று இருப்பது உறுதியாகியுள்ளதாக அம்மாநில தலைமை மருத்துவ சுகாதார அதிகாரி டாக்டர் பிரவீன் ஜாடியா தெரிவித்துள்ளார். இதையடுத்து மத்திய பிரதேசத்தில் கொரோனா தோற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 63 ஆக உயர்ந்துள்ளது. புதிதாக பாதிக்கப்பட்டோரில் சிலர் கொரோனா தொற்று உள்ளவர்களுடன் தொடர்பில் இருந்ததாக தெரிவித்துள்ளார். அம்மாநிலத்தில் இதுவரை 600 பேர் தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருவதாக கூறியுள்ளார்.

Categories

Tech |