இந்தியாவில் கொரோனா மூன்றாவது அலை தாக்கம் அதிகரித்து கொண்டே வருகிறது. கடந்த இரண்டு அலைகளை விட இந்த அலையில் கொரோனாவால் திரைப்பிரபலங்கள் அதிக அளவில் பாதிக்கப்பட்டு வருகின்றனர். அந்த வகையில் வடிவேலு, உலக நாயகன் கமல்ஹாசன், மீனா, அருண் விஜய், மகேஷ்பாபு, திரிஷா என பலரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருந்தனர்.
இந்த நிலையில் பிரபல முன்னணி நடிகர் ஒருவர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. அதாவது தெலுங்கு திரையுலகில் பிரபல முன்னணி நடிகரான சிரஞ்சீவிக்கு கொரோனா தொற்று பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இதையடுத்து சிரஞ்சீவி தான் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருப்பதை டுவிட்டர் பக்கத்தில் கூறியுள்ளார்.
மேலும் தனது டுவிட்டர் பதிவில் “மிகவும் கவனமாக இருந்து வந்த நான் தற்போது கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளேன். எனவே தயவு செய்து என்னுடன் நெருக்கத்தில் இருந்தவர்கள் தங்களை பரிசோதித்துக் கொள்ளுங்கள். விரைவில் நலம் பெற்று உங்களை காண ஆவலுடன் காத்திருக்கிறேன்” என்று சிரஞ்சீவி கூறியிருக்கிறார். இதனால் ரசிகர்கள் சோகத்தில் உள்ளனர்.