Categories
தேசிய செய்திகள்

“கொரோனா வென்றுவிட்டது, பாஜக தோற்றுவிட்டது”… பாஜகவை கடுமையாக தாக்கிய சிவசேனா..!!

கொரோனா வென்றுவிட்டது, பாஜக தோற்றுவிட்டது என்று சிவசேனாவின் அதிகாரப்பூர்வ பத்திரிக்கையாளர் சாம்னா கூறியுள்ளது.

ஒரே வரியில் சொல்ல வேண்டுமானால் பாஜக தோற்றுள்ளது. கொரோனா வென்றுள்ளது என சிவசேனாவின் அதிகாரப்பூர்வ பத்திரிக்கையாளர் சாம்னா கூறியுள்ளது. இதுமட்டுமல்லாமல் நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை மே 2-ஆம் தேதி நடைபெற்றது. இதில் மேற்கு வங்கத்தில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி அதிக தொகுதிகளில் வெற்றி பெற்று ஆட்சியை கைப்பற்றியது.

இதை சுட்டிக்காட்டிய அந்த பத்திரிக்கை மேற்கு வங்காள மக்கள் ஒரு சேர்க்கை அறைக்கு இரையாகாமல் இருந்ததற்கும், தங்களின் சொந்த கௌரவத்திற்காக ஒற்றுமையாக நின்றதையும் பாராட்ட வேண்டும் என்று கூறியுள்ளது. இதைத்தொடர்ந்து இந்த நாடு மேற்கு வங்கத்தில் இருந்து பாடம் கற்றுக் கொள்ள வேண்டும் எனவும் கூறியுள்ளது.

Categories

Tech |