Categories
மாநில செய்திகள்

கொரோனா விழுப்புணர்வு குறித்து மத்திய அரசு ஆலோசனை …!!

பொதுமக்களிடையே கொரோனா மீதான விழிப்புணர்வை அதிகரிப்பதற்கான புதிய பிரச்சார நடவடிக்கைகள் குறித்து மத்திய அரசு இன்று ஆலோசனை நடத்த உள்ளது.

கொரோனா ஊரடங்கில் ஏற்கனவே பல்வேறு தளர்வுகள் நடைமுறைக்கு வந்துள்ளன. இதன் தொடர்ச்சியாக எதிர்வரும் பண்டிகை காலங்களில் முன்னிட்டு மேலும் பல்வேறு தளர்வுகளை அறிவிக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. அதற்கு முன் கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து பொது மக்களிடையே மேலும் விழிப்புணர்வு ஏற்படுத்தும் புதிய பிரச்சார வழிமுறைகளை மேற்கொள்ள மத்திய அரசு முடிவு செய்துள்ளது.

இது தொடர்பான ஆலோசனை கூட்டம், மத்திய உள்துறை செயலர் அஜய்வளா தலைமையில் இன்று டெல்லியில் நடைபெற உள்ளது. இதனால் மக்களிடையே சமூக விலகல், முகக்கவசம் அணிதல், உட்பட பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து உணர்த்தும் வழிமுறைகள் குறித்து இக்கூட்டத்தில் ஆலோசிக்கப்படும் என கூறப்படுகிறது.

Categories

Tech |