ஊரடங்கு விதிகளை மீறி இயங்கும் சொகுசு ஹோட்டலில் அமைச்சர்கள் உணவருந்திய சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
உலகையே அச்சுறுத்திய கொரோனா வைரஸ் கடந்த 2019 ஆம் ஆண்டு சீனாவின் வுகான் நகரில் தோன்றியது. இதன் தாக்கம் கடந்த சில மாதங்களாக குறைந்து வந்த நிலையில் தற்போது மீண்டும் அதிகரித்துள்ளது. இதனால் பிரான்சில் கொரோனா தொற்று தொடர்ந்து அதிகரித்து வருவதால் அதனை கட்டுப்படுத்த ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் பிரான்சில் தலைநகர் பாரிஸில் ஊரடங்கு விதிகளை மீறி சொகுசு ஹோட்டல் இயங்குகிறது என்றும் அதில் அமைச்சர்கள் ரகசியமாக உணவு அருந்தியதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
https://twitter.com/i/status/1378089447271596038
இந்த நிகழ்வுகளை தொலைக்காட்சியை சேர்ந்த நிருபர் ஒருவர் வாடிக்கையாளர்கள் போல் சென்று வீடியோ எடுத்துள்ளார் என்று கூறப்படுகிறது. அங்கு அதில் உணவருந்த வரும் விருந்தாளிகளிடம் முக கவசங்களை அகற்ற சொல்வது போல் வீடியோ காட்சிகள் வெளிவந்துள்ளன. இதனிடையே அந்த வீடியோவில் அடையாளம் தெரியாத நபர் ஒருவர் அமைச்சர்களுடன் உணவருந்தியுள்ளார் என கூறியது சந்தேகங்களை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து உள்துறை அமைச்சர் கூறுகையில் கொரோனா விதிமுறைகளை மீறி செயல்படுவது ஏற்றுக்கொள்ள முடியாது என்றும் அந்த நபர் மீது விசாரணை தொடரும் எனவும் கூறியுள்ளார்.