முன் யோசனைகள் இல்லாமல் செயல்பட்டு பின்வாங்குவது தமிழக அரசின் பழக்கம் என்று திமுக தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் வருகின்ற 16ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என்று அரசு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இது பற்றி திமுக தலைவர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், “பள்ளிகளை திறக்கும் தேதியை அறிவித்துவிட்டு பிறகு ஒத்தி வைப்பது எடப்பாடி அரசின் ஊசலாட்டம் மனநிலையைக் காட்டுகிறது.
அது மட்டுமன்றி முன் யோசனைகள் இல்லாமல் அறிவித்து விட்டு பிறகு பின்வாங்குவது தமிழக அரசின் வழக்கமாகிவிட்டது. கொரோனா விட இவர்களின் அறிவிப்பே மிகவும் பீதியடையச் செய்கிறது” என்று அவர் கூறியுள்ளார்.