கரோனா வைரஸ் அச்சத்தில் மக்கள் உள்ள நிலையில் என்னென்ன உணவு வகைகளை தவிர்க்க வேண்டும் என்பது தொடர்பாக இப்பொழுது பார்க்கலாம்
1. சாலையோரங்களில் விற்கப்படும் பானி பூரி போன்ற சுகாதாரமற்ற உணவுகளை சாப்பிட வேண்டாம்.
2. பல நாட்களுக்கு முன்பே தயார் செய்து பாட்டிலில் அடைத்து வைக்கப்பட்ட பானங்களை தவிர்க்க வேண்டும்.
3. கோடைகாலம் என்று குளிர்ந்த உணவுகளை மட்டுமே சாப்பிடாமல் கொரோனாவிலிருந்து தப்பிக்க வெந்நீர், சூடான பால் இவற்றை சாப்பிடுவது நல்லது.
4. பதப்படுத்தப்பட்ட இறைச்சி வகைகளை வாங்குவதை காட்டிலும், கடைக்கு நேரில் சென்று பிரஸ்ஸான இறைச்சியை வாங்கி பயன்படுத்துங்கள்.
5. வீட்டில் சமைத்து உண்ணும் உணவுகளுக்கு எந்த பாதிப்பும் வராது என்பதால் எந்த இறைச்சியாக இருந்தாலும் நன்றாக வேகவைத்து சாப்பிடுங்கள்.
6. முட்டை, மீன், கோழி, ஆடு போன்ற உணவுகளால் பரவும் வதந்தி உண்மை அல்ல. எனவே இவைகளை அரை வேக்காடாகவோ, பச்சையாகவோ சாப்பிடாமல் நன்றாக வேக வைத்து வீட்டில் சமைத்து சாப்பிடுங்கள்.
7. நோய் வாய்ப்பட்ட பிராணிகளை விற்பனை செய்கிறார்களா என்பதை சோதனை செய்து வாங்குங்கள். அசைவ உணவுகளை சமைத்தால் அன்றைய தினமே சாப்பிட்டு விடுங்கள். ஃப்ரிட்ஜில் வைத்து மீண்டும் அதை சூடு படுத்தி சாப்பிடுவதை தவிர்த்து பல வகைகளில் நன்மை தரும்.
8. சமையலறையில் காய் வெட்ட பயன்படும் அரிவாள்மனை, கத்தி இவற்றை சுத்தமாகக் கழுவிக் கொள்ளுங்கள். இதன் மூலம் கூட வைரஸ் கிருமிகள் எளிதாகப் பரவும் என்பதால் கவனமாக இருக்கவேண்டும்.