கொரோனா முன்னெச்சரிக்கை விதிமுறைகளை முறையாக பின்பற்ற வேண்டும் என்று ராகுல்காந்தி வலியுறுத்தியுள்ளார்.
இந்தியாவின் இரண்டாம் அலை தற்போது படிப்படியாக குறைந்து கொண்டு வருகின்றது. நாட்டின் பல்வேறு மாநிலங்களில் ஊரடங்கு கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டு வருகின்றது. சுற்றுலாத்தலங்கள் உள்ளிட்ட பல பகுதிகளில் மக்களின் கூட்டம் அதிகரித்து வருகின்றது. இந்நிலையில் காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி தனது ட்விட்டர் பக்கத்தில் “தயவு செய்து பாதுகாப்பாக இருங்கள். அனைவரும் முன்னெச்சரிக்கை நெறி முறைகளை பின்பற்றுங்கள்” என்று பதிவிட்டுள்ளார். மேலும் கொரோனா இன்னும் ஓயவில்லை நாம் பாதுகாப்பாக இருப்பது மிகவும் அவசியம் என தெரிவித்துள்ளார்.