நாடு முழுவதும் கொரோனா பரவலை கட்டுப்படுத்த மத்திய மற்றும் மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. அதன் முக்கிய பகுதியாக பெரும்பாலான மாநிலங்களில் முழு ஊரடங்கு அமலில் உள்ளது. அதனால் மக்கள் வேலைக்கு செல்ல முடியாமல் தங்கள் வாழ்வாதாரத்தை இழந்து தவித்து வருகிறார்கள். அவர்களுக்கு அரசும் சில உதவிகளை செய்து கொண்டுதான் வருகிறது. இருந்தாலும் கொரோனா காரணமாக பலர் தங்களது வாழ்வாதாரங்களை இழந்தனர்.
வாழ்வாதாரங்களை இழந்த மக்களுக்கு தொடர்ந்து உதவி செய்து வரும் போராளிகளுக்கு மரியாதை செலுத்த டெட்டால் நிறுவனம் முடிவு செய்துள்ளது. டெட்டால் சனிடைசரில் லோகோவுக்கு பதிலாக தொடர்ந்து உதவி செய்து வரும் மக்களின் புகைப்படமும், அவர்களது கதையும் பொறிக்கப்பட்டுள்ளது. டெட்டால் சல்யூட்ஸ் பேக்குகள் என்று அழைக்கப்படும் இவை விரைவில் விற்பனைக்கு வருகின்றன.