Categories
உலக செய்திகள்

கொரோனா பாதிப்பு…. மீண்டு வந்த அதிபர் ஜோ பைடன்…. பிரபல நாடு வெளியிட்ட அறிவிப்பு….!!!!

அமெரிக்க அதிபர் ஜோபைடன் முன்பாகவே 2 டோஸ் தடுப்பூசிகளையும் போட்டுக்கொண்டார். இந்நிலையில் ஜோபைடனுக்கு சென்ற ஜூலை 21ம் தேதி கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து ஜோபைடன் தொற்று பாதிப்பிலிருந்து குணமடைந்து நலமாக இருக்கிறார் என்று வெள்ளைமாளிகை தெரிவித்தது. இந்த நிலையில் பைடனுக்கு மீண்டுமாக கொரோனா உறுதிசெய்யப்பட்டது. அதன்பின் பைடன் தன்னைதானே மீண்டும் தனிமைப்படுத்திக்கொண்டார்.

கொரோனா பாதிப்பு காரணமாக தன்னுடைய பயணங்களை ஜோபைடன் தள்ளிவைத்தார். அதனை தொடர்ந்து அதிபர் கண்காணிப்பில் உள்ளதாக வெள்ளைமாளிகை தெரிவித்தது. இந்நிலையில் அதிபர் ஜோபைடனுக்கு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அந்த சோதனையில் அவருக்கு தொற்று இல்லை என உறுதிசெய்யப்பட்டது. இதுகுறித்து ஜோபைடனின் மருத்துவர் கெவின் ஓ’கானர் ஒரு அறிக்கையில் கூறியிருப்பதாவது “அதிபர் தொடர்ந்து நன்றாக இருக்கிறார். அவருக்கு தொடர்ந்து சிகிச்சையளிக்க வேண்டிய அவசியமில்லை. எனினும் அவர் தொடர் கண்காணிப்பில் இருப்பார்” என்று கூறினார்.

Categories

Tech |