பிரான்ஸ் நாட்டின் ஜனாதிபதி தனது கொரோனா பாதிப்பை பற்றிய வீடியோவை ட்விட்டரில் வெளியிட்டுள்ளார்.
பிரான்ஸ் நாட்டின் ஜனாதிபதி இம்மானுவேல் மேக்ரான் கொரோனோ நோய் பாதிப்பால் தனிமைப்படுத்தப்பட்டிருந்தார் கொரோனா பாதிப்பு அவருக்கு உறுதி செய்யப்பட்டதை தொடர்ந்து எல்லீஸ் அரண்மனையில் இருந்த அவர் வெப்சைனர் என்ற பகுதியில் உள்ள பிரான்ஸ் ஜனாதிபதியின் இல்லம் ஒன்றில் தனிமையில் இருந்த படி பணியாற்றி வந்துள்ளார்.
— Emmanuel Macron (@EmmanuelMacron) December 18, 2020
இதனைத்தொடர்ந்து மேக்ரோனை ஐரோப்பிய ஒன்றிய தலைவர்கள் நேரில் சந்தித்ததால் அவர்களும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார்கள். இந்நிலையில் தற்போது அவர் டுவிட்டரில் ஒரு வீடியோவை பதிவிட்டுள்ளார். அந்த வீடியோவில் அவர் கூறியிருப்பதாவது, அனைத்து மக்களும் கவனமாக இருங்கள் யாரை வேண்டுமானாலும் இந்த வைரஸ் தாக்கலாம் நான் மிகவும் கவனமாக இருந்தும் அனைத்தையும் மீறி இந்த வைரஸ் என்னை தாக்கிவிட்டது இது துரதிஷ்டவசம் மற்றும் கவனக் குறைவின் காரணமாக கூட இருக்கலாம் என்று தெரிவித்துள்ளார்.
மேலும் அவர் கூறுகையில், நான் நலமாக உள்ளேன் வழக்கமாக கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஏற்படும் தலைவலி,சோர்வு மற்றும் வறட்டு இருமல் போன்ற அறிகுறிகள் எனக்கும் உள்ளன. இதனால் என் செயல்பாடு சிறிது தாமதமாகியுள்ளது. ஆனால் தொற்று நோய்க்கான முன்னுரிமை செயல்பாடுகளை நான் தொடர்ந்து மேற்கொண்டு தான் வருகிறேன் என்றும் தெரிவித்துள்ளார்