கொரோனாவால் பாதிக்கப்பட்டு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் எஸ்.பி.பி.க்கு அவரது பாடல்களை ஒலிக்கவிட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
பிரபல பாடகர் எஸ்.பி. பாலசுப்ரமணியம் கொரோனா உறுதி செய்யப்பட்டு சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு மருத்துவர்கள் தொடர்ந்து சிகிச்சை அளித்து வருகின்றனர். இந்நிலையில் தினம்தோறும் அவருடைய உடல்நிலை பற்றி அவரது மகன் எஸ்.பி.பி.சரண் வீடியோ பதிவை வெளியிட்டுக் கொண்டிருக்கிறார். தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று கொண்டிருக்கும் எஸ்.பி.பி.க்கு அவரது பாடல்களை ஒலிக்கவிட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றது.
அவர் அனுமதிக்கப்பட்டுள்ள ஆறாவது மாடியில் உள்ள அறையில் ஒலிபெருக்கிகள் அமைக்கப்பட்டு பாடல்கள் ஒலிக்கப்படுகின்றன. அவரது பாடல்களை கேட்பதால் அவர் கருணா பாதிப்பிலிருந்து விரைவில் மீண்டு வருவார் என இசைப் பிரியர்கள் கூறியுள்ளனர்.