தமிழகம் முழுவதும் கொரோனா காரணமாக கடந்த ஆண்டு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அப்போது பலத்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அதுமட்டுமல்லாமல் தடுப்பூசி போடும் பணியும் தீவிரப்படுத்தப்பட்டது. அதன்பிறகு கொரோனா பாதிப்பு கணிசமாக குறைந்து வந்த நிலையில் அரசு படிப்படியாக ஊரடங்கு தளர்வுகளை அறிவித்து வந்தது.
தற்போது கொரோனா வகை உருமாறிய ஒமிக்ரான் வைரஸ் அதிவேகமாக பரவி வருவதால் தமிழகத்தில் புதிய கட்டுப்பாடுகளுடன் கூடிய ஊரடங்கு ஜனவரி 10-ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமல்லாமல் மக்கள் முகக்கவசம் அணிந்து, சமூக இடைவெளியை பின்பற்ற வேண்டும் என்றும் அரசு அறிவுறுத்தியுள்ளது.
இந்நிலையில் சென்னையில் கடந்த சில நாட்களாக மீண்டும் கொரோனா பாதிப்பு அதிகரிக்க தொடங்கியுள்ளது. அதனால் சென்னை மாநகராட்சி சில கட்டுப்பாடுகளை அமல்படுத்தியுள்ளது. தற்போது சென்னையில் கொரோனா பாதித்தோர், வீட்டு தனிமையில் இருப்பவர்களுக்கு தொலைபேசி மூலமாக மருத்துவ ஆலோசனை பெற 044-25384520, 46122300 என்ற எண்களில் தொடர்பு கொள்ளலாம் என்று மாநகராட்சி அறிவித்துள்ளது.