Categories
தேசிய செய்திகள்

கொரோனா பரிசோதனை சான்றிதழ்…. இனி கோ-வின் செயலியிலேயே…. அரசு சூப்பர் அறிவிப்பு…!!!

இந்தியா முழுவதும் கொரோனா பாதிப்பை கண்டறிவதற்கு ஆர்டி-பிசிஆர் பரிசோதனை மேற்கொள்ளப்படுகிறது. தொற்று பரவலை கட்டுப்படுத்துவதற்காக ஒரு சில மாநிலங்களில் இருந்து வேறு மாநிலங்களுக்கு செல்வதற்கு ஆர்டி-பிசிஆர் பரிசோதனை சான்றிதழ் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. அதேபோல வெளிநாடுகளுக்கு செல்ல விமானங்களில் 72 மணி முதல் 96 மணி நேரத்திற்குள் பரிசோதனை மேற்கொண்ட சான்றிதழை கொடுக்க வேண்டும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இதனால் கொரோனா பரிசோதனை சான்றிதழ் பெறுவதற்கு மிகவும் சிரமமாக  உள்ளது. இந்நிலையில் மத்திய அரசின் கோவின் செயலியிலிருந்து ஆர்டி-பிசிஆர் பரிசோதனை மேற்கொண்ட சான்றிதழை உடனே பதிவிறக்கம் செய்யலாம் என்று தேசிய சுகாதார ஆணைய தலைவர் தெரிவித்துள்ளார்.

Categories

Tech |