தமிழகத்தில் கொரோனா இரண்டாவது அலையை கட்டுப்படுத்த அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன்படி ஊரடங்கு அமல் படுத்தப் படுவது தடுப்பூசி போடும் பணி, பரிசோதனை எண்ணிக்கையை கூட்டுவது போன்ற நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதன் பலனாக தமிழகத்தில் கொரோனா பாதிப்பு தொடர்ந்து குறைந்துகொண்டே வருகிறது. அதனால் மக்களுக்கு சற்று நிம்மதி அடைந்துள்ளனர்.
இந்நிலையில் தமிழகத்தில் கொரோனா பரிசோதனை முழுமையாக நடைபெறவில்லை என்று எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி குற்றம் சாட்டியுள்ளார். கொரோனா பரிசோதனையில் குளறுபடி நடக்கிறது. கொரோனா இல்லாதவர்களுக்கு பாசிட்டிவ் எனவும் கொரோனா இருப்பவர்களுக்கு நெகட்டிவ் எனவும் சான்றிதழ் வழங்கப்படுகிறது என்று அவர் கூறியுள்ளார்.