கொரோனா பரிசோதனைகளை அதிகப்படுத்தியதன் காரணமாகவே டெல்லியில் கொரோனா பாதிப்பு அதிகரித்து இருப்பதாக அம்மாநில சுகாதாரத்துறை அமைச்சர் திரு. சத்யேந்தர் ஜெயின் தெரிவித்துள்ளார்.
டெல்லியில் கடந்த சில மாதங்களாக கொரோனா பாதிப்பு மிகக் குறைவாகவே பதிவானது. ஆனால் கடந்த சில நாட்களில் காற்றுமாசு கடும் குளிர் காரணமாக மீண்டும் கொரோனா பரவல் அதிகரிக்க தொடங்கியதாகக் கூறப்பட்டது. நேற்று டெல்லியில் கொரோனா பாதிப்பு 5,000-தை கடந்தது. இது தொடர்பாக செய்தியாளர்களைச் சந்தித்த அம்மாநிலத்தின் சுகாதாரத்துறை அமைச்சர் திரு. சத்யேந்தர் ஜெயின் கொரோனா பரிசோதனை அதிகரிக்கப்பட்டதன் காரணமாகவே பாதிப்பும் உயர்ந்ததாக தெரிவித்தார்.
ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டால் அவருடன் தொடர்பில் இருந்த 15-க்கும் மேற்பட்ட இருக்கும் பரிசோதனை செய்யப்படுவதாக கூறினார். இந்த பரவலாக பரிசோதனையை பாதிப்பு அதிகரிக்க காரணம் என அவர் தெரிவித்துள்ளார்.