மனிதர்களுக்கு தொற்று பரவ காரணமாக இருந்த கீரிகளை கொலை செய்ய உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது
சீனாவில் உள்ள வூஹான் நகரில் கடந்த டிசம்பர் மாதம் கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா வவ்வால்கள் மூலம் பரவியதாக தகவல்கள் வெளிவந்தது. தற்போது உலகம் முழுவதிலும் இந்த தொற்று பரவி ஏராளமான உயிர் இழப்புகளை ஏற்படுத்தி வருகிறது. மனிதர்கள் மட்டுமல்லாமல் சிங்கம், புலி, பூனை, நாய் என விலங்குகளும் தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் டென்மார்க் நாட்டில் மின்கு கீரிகளை வளர்க்கும் பண்ணையில் பணிபுரியும் 214 தொழிலாளர்களுக்கு கொரோனா பாதிப்பு உறுதிப்படுத்தப்பட்டது. அவர்களுக்கு தொற்று பரவியது எப்படி என்ற ஆராய்ச்சியில் பண்ணையில் வளர்க்கப்பட்டு வந்த மின்கு கீரிகள் மூலமாக தொழிலாளர்களுக்கு தொற்று பரவியது உறுதியானது. அதோடு மற்றவர்களை காட்டிலும் கீரிகள் மூலமாக தொற்று பரவியவர்களுக்கு வைரஸின் வீரியம் அதிகமாக இருந்துள்ளது.
இது தடுப்பு மருந்தின் நிலைப்பாட்டை கெடுக்கும் விதமாக அமையும் என விஞ்ஞானிகள் கருதினர். இதனைத் தொடர்ந்து பண்ணையில் வளர்க்கப்பட்டு வந்த 1 கோடியே 70 லட்சம் கீரிகளை கொல்வதற்கு அந்நாட்டு பிரதமர் உத்தரவு பிறப்பித்தார். எதிர்காலத்தில் ஏற்படும் பாதிப்பை தடுப்பதற்காகவே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாக பிரதமர் தெரிவித்துள்ளார்.