கர்நாடக மாநிலத்தில் கொரோனா பரவல் மோசமாக உள்ளது. நிலமை கைமீறிவிட்டது என்றும், யாரும் வீட்டை விட்டு வெளியே வரவேண்டாம் என்றும் எடியூரப்பா தெரிவித்துள்ளார்.
இந்தியாவில் கடந்த சில மாதங்களாக கொரோனா தொற்று தொடர்ந்து அதிகரித்துக் கொண்டு வருகின்றது. ஒருபுறம் தொற்று அதிகரித்துக்கொண்டே இருக்கும் நேரத்தில் மறுபுறம் ஆக்சிசன் பற்றாக்குறை என்பது அதிக அளவில் ஏற்பட்டு வருகின்றது. பல மாநிலங்களில் ஆக்சிஜன் பற்றாக் குறையின் காரணமாக நோயாளிகள் உயிரிழப்பு அதிகரித்துக்கொண்டே வருகின்றது. மேலும் ஆக்சிஜனை அதிக அளவில் உற்பத்தி செய்ய பிரதமர் மோடி உத்தரவிட்டுள்ளார்.
இந்நிலையில் கர்நாடகாவில் கொரோனா பரவல் மிக மோசமாக உள்ளது என்றும் நிலமை கைமீறி சென்றுவிட்டது என்றும் அம்மாநில முதலமைச்சர் எடியூரப்பா தெரிவித்துள்ளார். பொதுமக்களை கைக்கூப்பி கேட்டுக்கொள்கிறேன் யாரும் வீட்டை விட்டு வெளியே வரவேண்டாம் எனவும் எடியூரப்பா தெரிவித்துள்ளார்.