பெரம்பலூர் மாவட்டத்தில் சனி பிரதோஷத்தை முன்னிட்டு நந்தி பெருமானுக்கு அபிஷேகம் செய்யப்பட்ட போது பக்தர்கள் கோவில்களின் வெளியே நின்று வழிபாடு செய்தனர்.
பெரம்பலூர் மாவட்டத்தில் பல்வேறு சிவன் கோவில்களில் நேற்று முன்தினம் சனி பிரதோஷ சிறப்பு வழிபாடு நடைபெற்றது. பெரம்பலூர் மாவட்டத்தில் கொரோனா பரவல் காரணமாக இந்து சமய அறநிலையத்துறையின் கீழ் உள்ள சிவன் கோவில்களில் சனி பிரதோஷத்தை முன்னிட்டு சிறப்பு அலங்காரம், அபிஷேகம், தீபாராதனைகள் ஆகியவை நந்தி பெருமானுக்கு செய்யப்பட்ட போது பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்படவில்லை.
இதனால் பக்தர்கள் கோவிலின் வெளியே நின்று நந்தி பெருமானை வழிபட்டனர். மேலும் பக்தர்கள் தீபாராதனை முடிந்த பிறகே நந்தி பெருமானை தரிசிப்பதற்காக அனுமதிக்கப்பட்டனர். அதன்பின் கொரோனா தடுப்பு வழிகாட்டு முறைகளை பின்பற்றி பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று நந்தி பெருமானை தரிசித்து சென்றனர்.