கொரோனா பரவலை தடுப்பதற்காக மலேசியாவிற்கு சுற்றுலாப்பயணிகள் வர இந்த வருடத்தின் இறுதி வரை தடை நீடிக்கப்பட்டுள்ளது.
மலேசியாவில் தொலைக்காட்சி மூலமாக மக்களிடம் உரையாற்றிய பிரதமர் முகைதின் யாசின் கூறுகையில், உலகின் மற்ற நாடுகளில் தொற்றின் தாக்கம் அதிகரித்து வருகின்றது. நம் நாட்டில் நிலைமை கட்டுப்படுத்தப்பட்டு இருந்தாலும் சில இடங்களில் கொரோனா பரவல் அதிகரித்து வருகிறது.
இதனை தடுக்கும் விதமாக வெளிநாட்டிலிருந்து வரும் சுற்றுலா பயணிகள் மலேசியா வருவதற்கு போடப்பட்ட தடை இந்த வருடத்தின் இறுதி வரை நீட்டிக்கப்படுகிறது. அதோடு ஏற்கனவே அமலில் இருக்கும் கட்டுப்பாடுகளும் நீட்டிக்க படுகின்றன எனக் கூறியுள்ளார்.