மதுரையில் கொரோனா நோயாளிகளை உற்சாகப்படுத்தும் வகையில் பெண் மருத்துவர்கள் செய்த செயல் வியப்பை ஏற்படுத்தியுள்ளது.
மதுரையில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு அரசு மருத்துவமனை, ரயில்வே மருத்துவமனை மற்றும் பல்வேறு சிறப்பு முகாம்களில் தங்க வைக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றது. அங்கு 24 மணி நேரமும் மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் தொடர்ந்து பணியாற்றி வருகிறார்கள்.
இதனையடுத்து கொரோனா நோயாளிகளுக்கு உற்சாகம் அளிக்கும் வகையில் ரயில்வே மருத்துவமனையில் பெண் மருத்துவர்கள் பாதுகாப்பு கவச உடைகளை அணிந்து கொண்டு கையில் சனிடைசர், தெர்மல் ஸ்கேனர் மற்றும் ஆக்சோ மீட்டர் ஆகியவற்றை பிடித்துக்கொண்டு அம்மன் சிலை போல் நின்று விழிப்புணர்வு ஏற்படுத்தினார்கள். அந்தக் காட்சி கொரோனா நோயாளிகளுக்கு அம்மனே நேரில் வந்தது போன்று உற்சாகத்தை அளித்துள்ளது.