நாடு முழுவதும் கொரோனா இரண்டாவது அலை வேகமெடுத்து வருகின்றது. இதனால் நாளுக்கு நாள், இறப்பு விகிதங்களும், பாதிப்பு எண்ணிக்கையும் அதிகரித்துக்கொண்டே வருகிறது. எனவே ஒரு சில மாநிலங்களில் ஊரடங்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. இதற்கு மத்தியில் ஆக்சிஜன் தட்டுப்பாட்டின் காரணமாக பல கொரோனா நோயாளிகள் உயிரிழந்து வருகின்றனர். கொரோனா இரண்டாவது அலையால் நாடே பெரும் துயரத்திற்குள்ளாகியுள்ளது. இதனால் தங்களுடைய உறவுகளையும், அன்பானவர்களையும் இழக்கும் சூழ்நிலை உருவாகியுள்ளது.
இந்நிலையில் நாடு முழுவதும் கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க ஆக்சன் தேவை அதிகரித்து வருகிறது. கிடைப்பதற்கு நிதியுதவியும், ஆக்சிஜன் செறிவூட்டிகளையும் நன்கொடையாக வழங்கி வருகின்றனர். இந்நிலையில் கிரிக்கெட் வீரர் ஷிகர் தவான் ஆக்சிஜன் செறிவூட்டிகளை நன்கொடையாக வழங்கியுள்ளார். ஏற்கனவே கொரோனா நிவாரண நிதியாக ரூபாய் 20 லட்சம் வழங்கிய நிலையில் தற்போது ஆக்சிஜன் சிலிண்டர்களை வழங்கியுள்ளார்.