தூத்துக்குடி மாவட்டம் நாசரேத் பகுதியில் முககவசம் மற்றும் கபசுர குடிநீர் வணிகக்குழு சார்பாக வழங்கப்பட்டுள்ளது.
நாடு முழுவதும் கொரோனா பெருந்தொற்று தலைவிரித்தாடும் நிலையில் தூத்துக்குடி மாவட்டம் நாசரேத், வகுத்தான் குப்பம், கந்தசாமி புரம் ஆகிய பகுதிகளில் வணிகக்குழு சார்பாக ஊர்பொதுமக்களின் பாதுகாப்பு கருதி முககவசம் மற்றும் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் விதமாக அனைவருக்கும் கபசுர குடிநீர் வழங்கப்பட்டுள்ளது.
இந்நிகழ்ச்சியில் வணிகக்குழு தலைவரான காமராஜர், வனத்துறை அலுவலர் சுப்புராஜ், ஆடிட்டர் விஜய பிரியா, வன காப்பாளர் ராமசாமி மற்றும் சமூக ஆர்வலர் ஆகியோரின் முன்னிலையில் பொதுமக்களுக்கு கபசுர குடிநீர் மற்றும் முககவசம் வழங்கப்பட்டுள்ளது.