Categories
மாநில செய்திகள்

கொரோனா தொற்று….. 7 மாவட்டங்களில் கட்டுப்பாடு….. வெளியான தகவல்….!!!

தமிழகத்தில் கட்டுக்குள் இருந்த கொரோனா பரவல் தற்போது கடந்த சில நாட்களாக மீண்டும் அதிகரித்து வருகின்றது. தொற்று வைரசால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. தமிழகத்தில் கொரோனா பாதிப்பு புதிய உச்சமாக 500-ஐ நெருங்கி உள்ளதால் மருத்துவர்கள் பெரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். இன்று 169 பேர் டிஸ்ஜார்ஜ் ஆன நிலையில், நீண்ட நாட்கள் கழித்து ஒருவர் உயிரிழந்துள்ளார் . கொரோனா தொற்று கிடுகிடுவென என உயர்ந்துள்ளதால், கொரோனா அதிகரிக்கும் சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர் ,காஞ்சிபுரம், நீலகிரி, குமரி மாவட்டங்களில் கட்டுப்பாடுகளை தீவிரப்படுத்த அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

இதனிடையே தொற்று அதிகமாக உள்ள மாவட்டங்களில் கொரோனாவை கட்டுப்படுத்த மீண்டும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட வாய்ப்பு இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இது குறித்து அறிவிப்பு எந்த நேரத்திலும் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

Categories

Tech |